No.1, Alandur Market Lane, Pillaiyar Kovil Next Shop, Alandur, Chennai , Tamil Nadu - 600016, India
MAKE YOURSELF AND YOUR FAMILY SAFE
Keeping your safety in mind, we come up with our organic products. ARUGAM ANGADI
We are merchants and manufacturers of organic products and wood pressed oil.
Are you sure that your wood pressed oil is really from a wood press?
No worries hearafter. Here we grind the products that you bring in front of your eyes within an hour. You can also take the residues with you. You will come to know how worthy is this oil to its price.
For ground nut oil:
Things to be brought:
Well cleaned and sun dried groundnuts
Quantity : 5kg to 7kg
Rate: ₹30 per kg
For gingely oil:
Things to be brought:
Well cleaned and sun dried sesame
Karuppatti: 400gm
Quantity : 5kg to 7kg
Rate: ₹25 per kg.
For coconut oil:
Things to be brought:
Well cleaned and sun dried coconut pods
Quantity : 5kg to 7kg
Rate: ₹25 per kg.
Come and cherish health from the bottom of your heart.
Our other products:
Caster oil, Wild Honey,karupatti,palm candy,jagerry, vettiver soap, kasthoori manjal soap, turmerics soap, neem soap etc.,
What is our motto?
Bringing out the culture of being aware of what is bought. Making the connection with organic farmers and customers who need them.
What is unique in stone press?
As it generates less heat while grinding, the vitamins and minerals are protected.
We slow down the press to avoid heat which needs an hour for this process.
This can be cleaned with water, hence cleanliness, taste,colour and smell are assured.
No adulteration
For better result keep the oil in sunlight for sometime.
Colour taste and smell depend upon the things that you bring.
For 1litre of oil we need 2 3/4 to 3 kgs of raw materials.
Address:
Arugam angadi
1, Market lane, Market, Aalandhur, Chennai--600016
Whats app:9841936323.
நீங்கள் உபயோகிப்பது உன்மையில் மரச்செக்கில் அரைக்கப்பட்ட எண்ணெய் தானா?
இப்போது எங்கு பார்த்தாலும் மரச்செக்கு எண்ணெய் என்று விளம்பரப்படுத்தி விற்பனை செய்யபடும் எண்ணெய் உண்மையில் மரச்செக்கில் அரைத்தது தானா?
இனி கவலை வேண்டாம்.
இதோ நாங்கள் உங்கள் கண்ணெதிரே கல்மரச்செக்கில் நீங்கள் கொண்டுவரும் பொருட்களை ஒரு மணிநேரத்தில் அரைத்து தருகிறோம்.
புண்ணாக்கு தாங்களே எடுத்து கொண்டு விற்பனை செய்து கொள்ளலாம். கலப்படம் இல்லாத எண்ணெய், தரம், எவ்வளவு விலை வருகிறது என்று புரியும்.
கடலை எண்ணெய்:
கொண்டு வரவேண்டிய பொருள்: சுத்தம் செய்த நன்கு வெயிலில் காய வைத்த வேர்க்கடலை.
அளவு: 5 - 7 கிலோ
கூலி - ஒரு கிலோவிற்கு 30 ரூபாய்.
நல்லெண்ணெய்:
கொண்டு வரவேண்டிய பொருள்: சுத்தம் செய்த நன்கு வெயிலில் காய வைத்த எள்.
கருப்பட்டி :400 கிராம்
அளவு: 5 - 7 கிலோ
கூலி - ஒரு கிலோவிற்கு 25 ரூபாய்.
தேங்காய் எண்ணெய்:
கொண்டு வரவேண்டிய பொருள்: சுத்த செய்து வெய்யிலில் காயவைத்து தேங்காய்
அளவு: 5 - 7 கிலோ
கூலி - ஒரு கிலோவிற்கு 25 ரூபாய்.
வாருங்கள்! மனத்திருப்தியுடன் ஆரோக்கியத்தை கொண்டாடுங்கள்.
எங்களின் தனித்துவம்
கலப்படம் அற்ற மற்றும் தரமான உணவு தயாரிப்பதையும், விவசாயிகளையும் தரமான மற்றும் கலப்படம் இல்லாமலும் உணவுப்பொருட்களை தேடும் வாடிக்கையாளர்களையும் அதை வழங்குவதையும், தான் விலை கொடுத்து வாங்கும் ஒரு பொருளின் முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு வாங்கும் கலாச்சாரத்தை உருவாக்குவதே எங்களின் நோக்கமாகும்.
கல் செக்கு
கல் செக்கிலிருந்து பிழித்தெடுக்கப்படும் எண்ணெயை வெயிலில் காய வைத்தால் தானாகவே தெளிந்துவிடும். இதனால், அந்த எண்ணெய்களில் உள்ள சத்துகள் அப்படியே இருக்கும்.
கல் செக்கு மூலம் மெதுவாக இயக்குவதால், மூலப்பொருட்கள் சூடாவதில்லை. நல்ல பக்குவத்தில் அதில் உள்ள சத்துகள் சிதையாமல் பாதுகாக்கப்படுகின்றன.
எண்ணை சூடாகாமல் இருக்க மோட்டார் வேகத்தை இரு மடங்கு குறைத்துள்ளோம். எனவே ஒரு செக்கு ஆட்ட சுமார் ஒரு மணி நேரமாகும்.
நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் கல் செக்கில் ஆட்டி எடுக்கப்படுகின்றன. கல் செக்கு என்பதால் (நிலக்கடலை, எள்ளு, கொப்பரை தேங்காய்) மாற்றி ஆட்டுவதற்காக கல் செக்கை சுத்த படுத்த தண்ணீர் விட்டு அலசிகொள்ளலம்.
கல் செக்கு எண்ணெயானது உண்மையான நிறம் மற்றும் சுவையுடனும் வாசனையுடனும் மூன்று மாதங்கள் வரை மாறாமலும் கெட்டுப் போகாமலும் இருக்கும், இந்த எண்ணெயில் சமைக்கும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
தரம்
இங்கு விற்கப்படும் எண்ணெயில் ஒருபொழுதும் கலப்படங்கள் இருக்காது.
முதல் தரமான மூலப்பொருட்களை(நிலக்கடலை, எள்ளு, கொப்பரை தேங்காய் Unsulfured) பயன்படுத்துகின்றோம்.
உடனுக்குடன் எண்ணை ஆட்டி தருவதால் எண்ணெயில் ஈரபதம் இருக்கும். ஆவி ஆவதற்காக எண்ணெயை வெயிலில் வைத்து தெளியவைத்தால் அதன் ஆயுள் அதிகரிக்கும்.
எண்ணைகளின் தரமானது விதைகளின் ரகம், பருவம்(பட்டம்) காலநிலை தட்ப வெப்பநிலை இவற்றிக்கு ஏற்ப மாறுபடுவதால் ஒவ்வொரு முறையும் சிறு சிறு மாற்றங்கள்(நிறம்,வாசனை,சுவை) இருந்து கொண்டே இருக்கும்.
சுமார் 2 3/4 கிலோ முதல் 3 கிலோ வரை தரமான (விதைகளின் தரத்திற்கு ஏற்ப) விதைகள் போட்டால் தான் 1 லிட்டர் எண்ணை கிடைக்கும்.
விலை
மூலப்பொருட்களின்(நிலக்கடலை, எள்ளு, கொப்பரை தேங்காய் Unsulfured) விலை ஏறினால் எண்ணெய் விலை ஏறும் விலை குறைந்தால் எண்ணெய் விலை குறையும்.
மூலப்பொருட்களின் ஏற்ற இறக்கங்கள் ஏற்றார் போல், மூலப்பொருட்களில் இருந்து 40 சதவீதம் மற்றுமே எண்ணெய் பிழிந்து எடுக்க முடியும். மீதி 60 சதவீதம் புண்ணாக்கு போகும். மூலப்பொருளின் சந்தை நிலவரம் மாறுதலுக்குடபட்டது போலவே புண்ணாக்கின் விலையும் சந்தை நிலவரப்படி மாறுதலுக்கு உட்பட்டது. புண்ணாக்கின் விலையே பொருத்து எண்ணெயின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதைத் தவிர மூலப்பொருட்களை பக்குவப்படுத்தி எண்ணெய் ஆட்டுவதற்கான கூலி, போக்குவரத்து, பயன்படுத்தும் மின்சாரம் மற்றும் மரச்செக்கு உலக்கையின் தேய்மானம் என இவை அனைத்தும் உள் அடக்கி மட்டுமே வரும். இவற்றின் உண்மையான விலையே தெரிந்து கொள்ள வாழ்க்கையில் ஒரு முறையேனும் குறைந்தது 1 மணி நேரம் செலவு செய்து மூலப்பொருட்களை நேரடியாக விவசாயிகளிடம் விலை கொடுத்து வாங்கி அரைத்து புண்ணாக்கை விற்று எவ்வளவு வருகிறது என்று கணக்கிட்டு பார்த்தால் மட்டுமே உங்களால் அதை புரிந்து தெரிந்து கொள்ள முடியும்.
கலப்பட எண்ணெயும் இப்போது செக்கு எண்ணெய் என்று கூறி விற்பனை செய்கிறார்கள். செக்கு எண்ணெய் என்பது ஒரு குடிசை தொழில். அதில் ஒரு போதும் குறைவான விலையில் அதிக உற்பத்தி செய்ய முடியாது.
Rotary Expeller போன்ற இயந்திரத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்களை மிக தந்திரமாக மரச்செக்கு எண்ணெய் என்று சொல்லை பயன்படுத்தாமல் வெறும் செக்கு எண்ணெய் என்று கூறி அதிலும் கலப்படம் செய்து குறைவான விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.
கலப்படம் இல்லாமலும் அதே நேரத்தில் தரம் இல்லாத மூலப்பொருட்கள் மற்றும் Rotary Expeller போன்ற இயந்திரங்களை பயன்படுத்தி எண்ணெய் எடுத்து செயற்கை நிறமூட்டிகள் மற்றும் செயற்கை மணமூட்டிகள் இவற்றை சேர்த்து குறைந்த விலையில் செக்கு எண்ணெய் என்று கூறி விற்பனை செய்கிறார்கள். இதை வாடிக்கையாளர்கள் ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்து மட்டுமே கலப்பட எண்ணெய் என்று கண்டறிந்து கொள்ள முடியும்.
Day | Open | Closed | Lunch |
---|---|---|---|
Monday | 09:00 am | 09:00 pm | 01:00 pm - 02:00 pm |
Tuesday | 09:00 am | 09:00 pm | 01:00 pm - 02:00 pm |
Wednesday | 09:00 am | 09:00 pm | 01:00 pm - 02:00 pm |
Thursday | 09:00 am | 09:00 pm | 01:00 pm - 02:00 pm |
Friday | 09:00 am | 09:00 pm | 01:00 pm - 02:00 pm |
Saturday | 09:00 am | 09:00 pm | 01:00 pm - 02:00 pm |
Sunday | Closed | Closed |
Posted on: May 25, 2024
I am regularly using this product. Product quality very good and healthy. With affordable price. Most impressive one is made by organic method.
Address : No.1, Alandur Market Lane, Pillaiyar Kovil Next Shop, Alandur, Chennai , Tamil Nadu - 600016, India